டிஎன்பிஎஸ்சி தேர்வு: தமிழ்நாடு முழுவதும் 4.90 லட்சம் பேர் பங்கேற்பு

7 hours ago 4

சென்னை, நவ. 1- டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 1,647 மய்யங்களில் இன்று நடைபெறுகிறது. 4.90 லட்சம் பேர் தேர்வு எழுது கின்றனர்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இள நிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 43 காலி இடங்களையும், கூட்டுறவு பால் சங்கங்களின் முது நிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 803 காலி இடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆக.11ஆம் தேதி வெளி யிட்டது. 3.06 லட்சம் பெண்கள், 1.84 லட்சம் ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 4.90 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப்-2, 2ஏ முதல் நிலைத் தேர்வு சென்னையில் 173 மய்யங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1,647 மய்யங்களில் நடை பெறுகிறது.

Read Entire Article