2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி தேசிய தினச் செய்தியை வெளியிடும் பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப்படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Prime Minister's National Day message to be broadcast on 8 August.
Prime Minister Lawrence Wong will deliver Singapore's 61st National Day Message in English on Saturday, August 8, at 6:45 pm on CNA and CNA938. Deputy Prime Minister Gan Kim Yong will deliver the message in Mandarin, Dr Zaqy Mohamad in Malay, and Mr Dinesh Vasu Das in Tamil. Broadcasts will occur on various channels like Channel 8, Suria, and Vasantham throughout the evening. After airing, all four language messages will be accessible on the Prime Minister's Office website and YouTube page.
Generated by AI
சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தை முன்னிட்டு, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் 2026 தேசிய தினச் செய்தி சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்படும்.
பிரதமரும் நிதி அமைச்சருமான திரு வோங் தமது உரையை ஆங்கிலத்தில் ஆற்றுவார். துணைப் பிரதமரும் வர்த்தக, தொழிற்துறை (வர்த்தகம்) அமைச்சருமான திரு கான் கிம் யோங் மாண்டரின் மொழியிலும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது மலாய் மொழியிலும் உரையாற்றுவர்.
கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமிழில் தேசிய தினச் செய்தியை வழங்குவார்.
ஆங்கிலத்தில் தேசிய தினச் செய்தி மாலை 6.45 மணிக்கு சிஎன்ஏ, சிஎன்ஏ938 ஊடகங்களில் ஒளிபரப்பாகும். மாண்டரினில் இரவு 7 மணிக்கு ஒளிவழி 8, கேபிட்டல் 958 தளங்களிலும் மலாயில் இரவு 8.30 மணிக்கு சூரியா ஒளிவழியிலும் தேசிய தினச் செய்தி ஒளிபரப்பப்படும்.
தமிழில் தேசிய தினச் செய்தி இரவு 9 மணிக்கு வசந்தம் ஒளிவழியிலும் ஒலி 968 வானொலியிலும் வெளியிடப்படும்.
ஒளிபரப்பிற்குப் பிறகு, பிரதமர் அலுவலகத்தின் இணையத்தளத்திலும் (www.pmo.gov.sg) அதன் யூடியூப் பக்கத்திலும் (www.youtube.com/pmosingapore) தேசிய தினச் செய்தியை நான்கு மொழிகளிலும் கேட்க முடியும்.
.png)



English (US) ·