பாலஸ்தீன ஆணையத்துக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது: நெட்டன்யாகு

57 minutes ago 1

ஜெருசலம்: மேற்குக் கரையில் தமது வீரர்கள் தாக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) அங்கு பெரிய அளவிலான ராணுவப் படைகளை இஸ்ரேல் பதிலடி வழங்க அனுப்பியது.

தீவிர பதில் தாக்குதலுக்கான உத்தரவை வழங்கிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பாலஸ்தீன ஆணையத்துக்கு ஆச்சரியம் காத்திருக்கின்றது என்று சாடினார்.

வெள்ளிக்கிழமை இரவு, ஐ24நியூஸ் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணிலில் அவர் அவ்வாறு கூறினார். அந்த நிகழ்ச்சியில் “பாலஸ்தீன ஆணையத்தை கலைப்பீர்களா,” என்ற ஊடக நெறியாளரின் கேள்விக்கு பதில் அளிப்பதை இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு தவிர்த்தார்.

செவ்வாய்க்கிழமை நடக்கப்போகும் தேர்தலை சந்திக்கவுள்ள இஸ்ரேலியப் பிரதமர், எதிரிகளைச் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்து ஆச்சரியப்படுத்துவதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.

“நாங்கள் கூறியபடி மத்திய கிழக்கையே மாற்றியமைத்தோம். எனவே பாலஸ்தீன ஆணைத்துக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது,” என்று அவர் நம்பிக்கையுடன் நேர்காணலில் பேசினார்.

அவரது அரசியல் கட்சிக்கு ஆதரவான வலதுசாரி கட்சிகளில் ஒன்று பாலஸ்தீன ஆணையத்தை கலைக்கும்படி அவரை கேட்டுக்கொண்டுள்ளது. 1990ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டுக்குப் பிறகு மேற்குக் கரையின் குறிப்பிட்ட பகுதிகளை பாதி அளவு தன்னாட்சி அதிகாரம் பெற்ற பாலஸ்தீன ஆணையம் ஆட்சி செய்கிறது.

இதனிடையே மேற்குக் கரையில் இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டத் தாக்குதலை ஹமாஸ் போராளி அமைப்பு வீரச்செயல் என்று ஆதரித்து வாழ்த்தியதோடு, தொடர்ந்து அதுபோன்ற சம்பவங்கள் நடந்தேற வேண்டும் என கேட்டுக்கொண்டது. அத்தாக்குதலுக்கு அது பொறுப்பேற்கவில்லை.

மேற்குக் கரையின் ஹெப்ரான் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அங்குள்ள தீவிரவாத மறைவிடங்களும் கட்டமைப்புகளும் அழிக்கப்படும் எனவும் பல நாள்கள் அதுபோன்ற நடவடிக்கைகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதனை இஸ்ரேலிய ராணுவமும் ஷின்பேட் உளவுத் துறையும் கூட்டறிக்கையில் தெரிவித்தன. இஸ்ரேல் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதாக தேர்தல் பிரசாரத்தில் உறுதியளித்துவரும் பிரதமர் நெட்டன்யாகு, தாக்குதல் நடந்த மேற்குக் கரையை நேரில் சென்று பார்வையிட்டார்.

Read Entire Article