“நீட் போராட்டம்; வழக்குகள் ரத்து” – அமைச்சர் ராஜ்மோகன்

1 month ago 12

Last Updated:Aug 02, 2026 9:16 PM IST

நீட் போராட்ட வழக்குகளை ரத்து செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

ராஜ்மோகன்
ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன், “தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு டெல்லியில் 20 நாளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா கேட்டு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு நடத்திய போராட்டத்தில் மாணவர்களும் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் போராட்டம் பரவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட அனைவர் மீதும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு போராட்டத்தை முடித்துக் கொள்ள, தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நீட்டால் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனும் நிபந்தனைகளை வைத்தது. இதனை மத்திய அரசு ஏற்ற பிறகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு தனது போராட்டத்தை திரும்ப பெற்றது.

டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலங்களில் நீட் விவகாரம் தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற்று அறிவித்தன.

தமிழ்நாட்டில் நீட் ரத்தை வலியுறுத்தி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அந்த வழக்குகளை ரத்து செய்வதாக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

As per the…


— Rajmohan (@imrajmohan) August 2, 2026

இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article