
பெங்களூரு, அக். 31-
பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில், 2 வெளிநாட்டவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஓரியாட் (வயது 45), நெதர்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மேக்சிமிலன் (வயது 59) ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவர்.
அல்சூரில் உள்ள கான்ராட் நட்சத்திர ஹோட்டலின் 3-வது தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
காப்பாற்ற முயன்ற 2 பேருக்கு காயம்
நீச்சல் குளத்தில் 2 வெளிநாட்டினரும் மின்சாரம் தாக்கி துடிப்பதைக் கண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும், ஹோட்டல் ஊழியர் (பூல் அட்டெண்டர்) ஒருவரும் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த அல்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த அலெக்ஸாண்டரின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீச்சல் குளத்தில் மின்கசிவு ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
.png)
6 hours ago
1







English (US) ·