Last Updated:Aug 02, 2026 5:42 PM IST
வல்வில் ஓரி விழா, தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி நாமக்கல், சேலம், திருப்பூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சங்ககாலத் தமிழ் மன்னரின் கொடையைப் போற்றும் வரலாற்றுச் சிறப்பு, ஆடிப்பெருக்கு எனும் பண்பாட்டு ஆடையாளம், இந்திய விடுதலைக்காகப் போராடிய மாவீரரின் தியாகம் என மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் வருகின்றன. நாளை, ஆகஸ்ட் 3ம் தேதி அன்று வரவுள்ள இந்நாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் ஒருவராகப் புகழ்பெற்ற வல்வில் ஓரி மன்னரின் வீரம் மற்றும் கொடைத் தன்மையைப் போற்றும் வகையில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, நாளைய (ஆக. 3) தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாளை (03.08.2026) திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பழையக்கோட்டை கிராமம், மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளாகும். மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவைப் போற்றும் வகையில், ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் முழு வேலை நாளாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆடிப்பெருக்கு (ஆடி.18) விழாவை முன்னிட்டும், தீரன் சின்னமலை நினைவுநாளை முன்னிட்டும் சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகியன மாவட்டங்களுக்கும் நாளை (ஆக. 3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுளளது. மேலும், ஆடிப்பெருக்கை ஒட்டி மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரள்வார்கள் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும். அவசர அரசுப் பணிகளைக் கவனிப்பதற்காக மாவட்டக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் அதிகார அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

El Nino: மேட்டூர் அணை 100 அடி வந்தாலே பெரிய விஷயம்... டெல்டா விவசாயிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து..?
எல்நினோ காரணமாக, இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டுவது கடினம்
100 அடியை எட்டினாலே பெரிய விஷயம்
வடகிழக்கு பருவமழையே ஒரே தீர்வு
.png)



English (US) ·