நள்ளிரவில் பொதுமக்களிடம் சிக்கிய திருடன்.. போலீசார் சொன்ன பகீர் காரணம்.. என்ன நடந்தது?

1 month ago 13

Last Updated:Aug 02, 2026 7:59 PM IST

நள்ளிரவு அவரது வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. 

சிக்கிய திருடன்
சிக்கிய திருடன்

நள்ளிரவில் திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க முயன்ற பொதுமக்களிடம், "காலை வரை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அரசம்பாளையம் கிராமத்தில் முத்துமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சனிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இரும்புக் கம்பிகளை கொண்டு திருட முயன்ற அந்த நபரின் நடமாட்டத்தை கவனித்த முத்துமாணிக்கம் ரகசியமாக அக்கம்பக்கத்தினருக்க தகவல் கொடுத்த உதவிக்கு அழைத்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தப்பிச் செல்ல முயன்ற மர்மநபரை சுத்துப் போட்டு கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, “பிடிபட்ட நபரை இரவு நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாது. காலை வந்து பார்த்துக் கொள்கிறோம். அதுவரை அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சென்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு.. கணவனை கொன்று 12 அடி ஆழத்தில் புதைத்த மனைவி.. இரண்டு ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

இதனால், பொதுமக்கள் இரவு முழுவதும் மாறி மாறி விழித்திருந்து பிடிபட்ட நபரை கண்காணித்து பாதுகாத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை கிணத்துக்கடவு போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு ஏராளமான கிராம மக்கள் திரண்டிருந்தனர். திருடனை பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், போலீசார் அலட்சியமாக நடந்துகொள்வதாகவும், பொறுப்பை பொதுமக்கள் மீது சுமத்தியதாகவும் கூறி, போலீசாரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மர்மநபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? இதற்கு முன்பும் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. திருட முயற்சி செய்த சம்பவத்தை விட, பிடிபட்ட நபரை இரவு முழுவதும் பொதுமக்களே பாதுகாப்பாக வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமும் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article