Last Updated:Nov 23, 2026 5:31 PM IST
நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் பேரில், அவதூறு பரப்பிய பயில்வான் ரங்கநாதன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் பேரில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்தில், மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறி, சமூகவலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வீடியோ வெளியிட்டனர். ஒருவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவதாகக் கூறி, அர்ஜுன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், யூடியூப்பரான பயில்வான் ரங்கநாதன் மற்றும் மேலும் ஒருவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஐடி பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனிடம் சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவலர்கள் வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பியவர்களை அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.png)






English (US) ·