“திரை உலகின் சூப்பர் ஸ்டார்..” - நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் வன்னியரசு!

1 month ago 14

Last Updated:Aug 03, 2026 12:38 PM IST

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

வன்னியரசு - ரஜினி
வன்னியரசு - ரஜினி

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திரை உலகின் Super star ரஜினிகாந்த்  அவர்களை சந்தித்துஇன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.

இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. “நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்” என வாழ்த்தி அனுப்பினார்.” என தெரிவித்துள்ளார்.  நடிகர் ரஜினியை பொறுத்தவரை, அவர் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார்.


#வாழ்த்து
திரை உலகின் Super star திருமிகு.@rajinikanth அவர்களை சந்தித்து
இன்று வாழ்த்துகள் பெற்றேன்.
சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.
இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.
“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்… pic.twitter.com/eeQpBvyhWn


— வன்னி அரசு (@VanniTamizhVCK) August 3, 2026

இந்தப் படத்தை ‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதையடுத்து ரஜினி, கமலுடன் இணைந்து நடிக்கிறார். இதனிடையே அவர் தனது சுயசரிதை எழுதி முடித்துள்ளதாகவும், அதை புத்தகமாக விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

First Published :

Aug 03, 2026 12:38 PM IST

Read Entire Article