"திருப்பரங்குன்றம் தீப வழக்கில், “தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது; அதிகாரிகள் அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளனர்” என உச்ச நீதிமன்றம் சாடியிருப்பது, திரு. விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு விழுந்த மாபெரும் சம்மட்டி அடியாகும்"- நயினார் நாகேந்திரன்
Published:Just NowUpdated:Just Now

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்து முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தவெக அரசின் சர்வாதிகார ஆணவத்திற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி. துளியேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால் ஜோசப் விஜய் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் தூண்
திருப்பரங்குன்றம் தீப வழக்கில், “தமிழகத்தில் நிர்வாகச் சீர்கேடு நிலவுகிறது; அதிகாரிகள் அரசியல் எஜமானர்களின் கட்டளைக்கு ஏற்பச் செயல்பட்டுள்ளனர்” என உச்ச நீதிமன்றம் சாடியிருப்பது, திரு. விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு விழுந்த மாபெரும் சம்மட்டி அடியாகும். ‘இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும்’ என உச்ச நீதிமன்றமே எச்சரிக்கும் அளவிற்குத் தமிழக ஆட்சி நிர்வாகத்தைத் தவெக அரசு சீரழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்ததோடு, தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது திரு. ஜோசப் விஜய் அரசின் நிர்வாகத் தோல்விக்குச் சான்றாகும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, தவெக அரசின் இந்து விரோதப் போக்கிற்குக் கிடைத்த தக்க பதிலடி.
நவம்பர் 20-ஆம் தேதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியிருப்பதையும், நாளை (நவம்பர் 28) மத்தியப் படை (CRPF) பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டிருப்பதையும், அனைத்துப் பக்தர்களும் தீபமேற்ற அனுமதி அளித்திருப்பதையும் மனதார வரவேற்கிறோம்.

முதல்வர் விஜய்
இந்துக்களின் ஆலய மரபுகளையும் வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டுச் சிதைக்கும் திரு. ஜோசப் விஜய்யின் அரசு, தனது இந்து விரோதப் போக்கால் தமிழகத்திற்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான தீர்ப்பைக் கேட்ட பிறகும், முதல்வராக நீடிக்கத் திரு. ஜோசப் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. துளியளவேனும் மானமும் மனசாட்சியும் இருந்தால், இந்த நிர்வாகச் சீர்கேட்டிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
.png)






English (US) ·