நர்சிங் மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நர்சிங் மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Published:Just NowUpdated:Just Now

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 4-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயின்ட்டராக வேலை பார்த்து வருகிறான். சிறுவன் கடந்த ஆண்டு நாகர்கோவில் செல்லும்போது அங்கே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நர்சிங் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டா ஐ.டி-யில் ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாவில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக இருவரும் நாகர்கோவில் பூங்காவில் அடிக்கடி சந்தித்துப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நர்சிங் மாணவியும் சிறுவனின் வீட்டுக்கு வந்து உடல் நலம் சரியில்லாத அவனின் அம்மாவை பார்த்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

போக்சோ வழக்கு
இதற்கிடையே நர்சிங் மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நர்சிங் மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், இதற்கு காரணம் யார் எனக் கேட்டுள்ளார். அப்போது, பெயின்ட்டிங் வேலைக்குச் செல்லும் 17 வயது சிறுவனிடம் ஏற்பட்ட பழக்கம் குறித்து மாணவி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைசித்தரிப்புப் படம்
இதற்கிடையே, மருத்துவமனை மூலம் காவல் நிலையத்துக்குத் தகவல் சென்றுள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்டு மாதம் 4-ம் தேதி சிறுவனின் வீட்டிற்குச் சென்ற நர்சிங் மாணவி, அங்கு யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததாகத் தெரியவந்தது. இது குறித்து சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் நர்சிங் மாணவி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
.png)







English (US) ·