எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது! – காவல்துறை விளக்கம்

11 minutes ago 1

Last Updated:November 27, 2026 9:14 PM IST

பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், அம்மாவட்ட உயர் பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, தியாகதுருகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், IPS, சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) என். காமினி, IPSன் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.


23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 27, 2026

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article