திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை : மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு

14 minutes ago 1

Last Updated:Nov 23, 2026 4:48 PM IST

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மலையைச் சுற்றி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் மதுரை மாநகர காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24-ன் கீழ், 23.11.2026 முதல் 24.11.2026 வரை திருப்பரங்குன்றம் மலை உச்சி உட்பட மலை முழுவதும். கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்கள் (UAV) பறக்கத் தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக (RED ZONE) அறிவிக்கப்பட்டுள்ளன.

Read Entire Article