“திமுகவினர் என்னை மோசமாக விமர்சிக்கின்றனர்” – அமைச்சர் கீர்த்தனா

11 hours ago 1

Last Updated:Oct 22, 2026 6:41 PM IST

மேயர் பிரியாவை விட திமுகவினர் தன்னை மிகவும் மோசமாக விமர்சிப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம்சாட்டியுள்ளார்.

News18
News18

மேயர் பிரியாவைவிட தன்னை திமுகவினர் மோசமாக விமர்சிப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம்சாட்டி உள்ளார்.

சிவகாசி அருகே தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அப்போது பேட்டியளித்த அவர், விமர்சன விவகாரத்தை மேயர் பிரியா பயன்படுத்திக்கொள்வதாக கூறினார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது; “மேயர் பிரியாவைவிட திமுகவினர் என்னை மிகவும் மோசமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துவருகின்றனர். எனவே யார் மீது தவறு இருந்தாலும் நிச்சயம் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர், “முதலமைச்சர் விஜய், வாழும் எம்.ஜி.ஆராகவே இருந்துவருகிறார். அது அவரது நடவடிக்கைகளில் தெரியும்” எனவும் தெரிவித்தார்.  முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், 2 மாதங்களில் அண்ணன் சீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

Read Entire Article