“தாய், தந்தை ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது பிள்ளைகள் எப்படி மாறுபடுவர்..” நீதிமன்றம் கேள்வி

1 month ago 12

Last Updated:Aug 02, 2026 6:58 PM IST

ராஜாஜி என்பவர் தனது குழந்தைக்கு தான் கோரிய சாதிச் சான்றிதழை வழங்க கடையநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். 

உயர்நீதிமன்றம் மதுரை கிளை
உயர்நீதிமன்றம் மதுரை கிளை

தாய், தந்தை இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, அவர்களது பிள்ளைகள் எப்படி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், அச்சம்பட்டியை சேர்ந்த ராஜாஜி என்பவர் தனது குழந்தைக்கு தான் கோரிய சாதிச் சான்றிதழை வழங்க கடையநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது சாதிச் சான்றிதழில் தொழுவ நாயக்கர் சாதி என்றும் எம்பிசி பிரிவு என்று இருப்பதாகவும், தனது மகனுக்கு எம்.பி.சி. சான்று வழங்க தாசில்தார் மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சாமிநாதன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாசில்தார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் துளுவ நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது மகனுக்கு எம்.பி.சி. சான்று வழங்க முடியாது என்று வாதிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள், தாசில்தாரின் வாதம் நியாயமானவையாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "கேரளாவில் வெள்ளப் பெருக்கு; சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்க" – தமிழ்நாடு அரசு

ஆனால், தாய், தந்தை இருவரும் இந்து-தொழுவ நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, ​​பிள்ளைகள் எப்படி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என்பதை தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் சமூக அந்தஸ்தைப் பெற்றோரிடமிருந்து பெறுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் குழந்தைக்கு உடனடியாக குறிப்பிட்டபடி சான்றிதழ் வழங்குமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“தாய், தந்தை ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது பிள்ளைகள் எப்படி மாறுபடுவர்..” நீதிமன்றம் கேள்வி

Read Entire Article