Last Updated:Oct 31, 2026 9:09 PM IST
தமிழகத்தில் கைதிகள் தொடர்ந்து தப்பியோடுவது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரசை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளியில் நடமாடும் குற்றவாளிகள் தான் தைரியமாகத் திரிகிறார்கள் என்றால், சிறையில் உள்ள குற்றவாளிகளோ சுதந்திரமாக வாழ்கிறார்கள்” என கைதிகள் தொடர்ந்து தப்பி ஓடும் சம்பவத்தைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மற்றும் தேனியைத் தொடர்ந்து கோவை அன்னூரில் கொள்ளை வழக்கில் கைதாகிய விசாரணைக் கைதி இரண்டாவது முறையாக சிறைக் காவலில் இருந்து தப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதன்முறை தப்பிய குற்றவாளியை முறையாக கண்காணிக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பை அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளியில் நடமாடும் குற்றவாளிகள் தான் தைரியமாகத் திரிகிறார்கள் என்றால், சிறையில் உள்ள குற்றவாளிகளோ சுதந்திரமாக வாழ்கிறார்கள். ஏதோ சுற்றுலாவிற்கு வந்தது போல, சிறையில் உள்ள கைதிகள் எல்லாம் ஆளாளுக்கு வெளியே சென்று வருவது, சமூகத்திற்கு பேராபத்தானது. குற்றவாளிகளின் இந்த துணிச்சல், சமூகத்தின் சமநிலையை பெருமளவில் சிதைத்துவிடும் என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.
சிறையில் உள்ள குற்றவாளிகள் தொடர்ந்து தப்பியோடுவதற்கு என்ன காரணம் என்பதை சிறைக் காவலர்களும் அதிகாரிகளும் முதலில் கண்டறிய வேண்டும். பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த வேண்டும். இனியொரு சிறைக்கைதி தப்பிக்காமல் இருப்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
.png)







English (US) ·