தவற்றின் காரணமாக ‘பிஎம்ஜிகேஏஒய்’ திட்டத்திற்குத் தகுதிபெறாதோர்க்கும் இலவச அரிசி

13 minutes ago 1

புதுடெல்லி: இந்தியாவின் பிரதான் மந்திரி கல்யாண் அன்னா ஜோஜனா (பிஎம்ஜிகேஏஒய்) திட்டத்தில் தகுதிபெறுவோரைச் சேர்த்துக்கொள்ளும் முறையில் தவறு ஏற்பட்டதால் அத்திட்டத்துக்குத் தகுதிபெறாத குடும்பங்களில் 13.2 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டடிருப்பது தெரியவந்துள்ளது.

உணவு, பொது விநியோகப் பிரிவு (டிஎஃப்பிடி) 2025-26 நிதியாண்டில் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் திட்டத்துக்குத் தகுதிபெறும் 51,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

கார், குளிரூட்டும் சாதனங்கள் உள்ள குடும்பங்களும் அரசாங்க வேலைகளில் பணியாற்றுவோர் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தோரும் பிஎம்ஜிகேஏஒய் திட்டத்துக்குத் தகுதிபெறமாட்டார்கள். அத்தகைய குடும்பங்களில் பல தவறுதலாக இலவச அரிசியைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தவறு நடந்ததைப் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம்தான் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆக அதிகமாக 39.5 விழுக்காட்டினர் திட்டத்துக்குத் தவறுதலாகத் தகுதிபெற்றதாக ஆய்வு தெரிவித்தது. அதற்கு அடுத்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் அவ்விகிதம் 39.2 விழுக்காடாகப் பதிவானது.

அதற்கும் அடுத்த நிலையில் வந்த தமிழகத்தில் அந்த விகிதம் 38.7 விழுக்காடாகப் பதிவானது.

அதேவேளை, பொதுவாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் விகிதம் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நகரங்களில் விகிதம் 15.6 விழுக்காடும் கிராமப்புறங்களில் 12.5 விழுக்காடும் பதிவானது.

Read Entire Article