அப்போது அவர் கூறியதாவது; ”இந்தியாவில் உள்ள அத்தனை ஓபிசி ஆர்கனைசேஷனுடைய தலைவர்களும் எங்களுடைய தலைவர் தளபதியார் அவர்களைச் சந்தித்து, வருகிற 28-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி சாதியைக் கணக்கெடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒரு போராட்டத்தை 28-ஆம் தேதி அறிவித்துள்ளதை அவர்களிடம் சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எங்களுடைய தலைவர், ஏற்கனவே சமூக நீதி விஷயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு என்னென்னவென்று எடுத்து விளக்கி, இது போன்ற விஷயங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாண்ட் என்னவென்று அவர்களுக்குத் தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே இது சம்பந்தமாக எங்களுடைய தலைவர் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி என்ற ஒரு காலம் (Column) உருவாக்கி, இந்தியாவில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்; இது சம்பந்தமாக பிரதமருக்குக் கடிதம் கூட எழுதியிருக்கிறார் என்பதை இங்கே தலைவர் சொன்னார்.
OBC யினரையும் இணைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
OBC தலைவர்களது போராட்டத்திற்கு திமுக ஆதரவு
-- அகில இந்திய OBC தலைவர்கள் திமுக தலைவர் அவர்களைச் சந்தித்து தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு கேட்ட பிறகு திமுக மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு. பி. வில்சன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.
இந்தியாவில் உள்ள அத்தனை ஓபிசி ஆர்கனைசேஷனுடைய தலைவர்களும் எங்களுடைய தலைவர் தளபதியார் அவர்களைச் சந்தித்து, வருகிற 28-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி சாதியைக் கணக்கெடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக ஒரு போராட்டத்தை 28-ஆம் தேதி அறிவித்துள்ளதை அவர்களிடம் சொல்லி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எங்களுடைய தலைவர் அவர்கள், ஏற்கனவே சமூக நீதி விஷயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு என்னென்னவென்று எடுத்து விளக்கி, இது போன்ற விஷயங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாண்ட் என்னவென்று அவர்களுக்குத் தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே இது சம்பந்தமாக எங்களுடைய தலைவர் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி என்ற ஒரு காலம் (Column) உருவாக்கி, இந்தியாவில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்; இது சம்பந்தமாக பாரதப் பிரதமருக்குக் கடிதம் கூட எழுதியிருக்கிறார் என்பதை இங்கே தலைவர் அவர்கள் சொன்னார்கள்.
இது சம்பந்தமாக திராவிட முன்னேற்றக் கழகம் பல மாதங்களுக்கு முன்னாடியே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற ஒரு அறிக்கை ஒன்றிய அரசிடமிருந்து வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடையதையும் சேர்ந்து சாதி கணக்கெடுக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள். இதைத்தான் எங்களுடைய தலைவர் இன்று இவர்களிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், 1931-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, ஒன்றிய அரசு மண்டல் கமிஷன் அமைக்கும் பொழுது, இந்த மண்டல் கமிஷன் 1931 சென்சஸின்படி 27% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது. அதன் பிறகு எந்த ஒரு சாதிவாரி கணக்கெடுப்பும் இதுவரை இந்தியாவில் செய்யப்படவில்லை. 2017-ல் 4,800 கோடி செலவில் சாதிவாரி கணக்கு எடுக்கப்படும் என்று எஸ்இசிசி (SECC) டேட்டா என்று கூறி ஆரம்பித்தார்கள். ஆனால் அதன் பின்பு அதில் குளறுபடிகள் இருக்கிறது, வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இன்று 11,500 கோடி செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் ஒரு படிவமும் வெளியிட்டார்கள். அந்தப் படிவத்தில் எஸ்சி, எஸ்டி என்பது மட்டும்தான் இருக்கிறது. ஓபிசி என்ற ஒரு தனியான டிராப்-டவுன் பாக்ஸ் இல்லை. இந்த டிராப்-டவுன் பாக்ஸ் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவில் உள்ள அத்தனை ஓபிசி சங்கங்களுடைய கோரிக்கை; திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையும் கூட. இது போன்ற ஒரு டிராப்-டவுன் பாக்ஸ் இருந்தால், ஓபிசி எத்தனை பேர் என்று சாதிவாரி கணக்கெடுப்பு செய்தால், இப்பொழுது நமக்கு இருக்கும் இந்த 27% — நான் சொல்வது ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்ட 27% — நிச்சயமாக தமிழ்நாடு போல 50%-க்கு மேல் இந்த இட ஒதுக்கீடு வரும். இந்த 50% இட ஒதுக்கீடு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஒன்றிய அரசு இந்த சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உண்டான அந்த காலத்தை அவர்கள் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
ஆகவே, இது இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஓபிசி மக்களைப் பாதிக்கிறது; அவர்களுக்கு என்று ஒரு காலம் இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தை இயற்றினாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று, நீதிமன்றத்தில் அந்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. ஏனென்றால், ஓபிசி பிரிவினருடைய டேட்டா இல்லை என்று உடனடியாக அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பீகாரில் ஓபிசி பிரிவினருக்கு அதிக இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள்; உடனே அங்குள்ள உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்ச நீதிமன்றமும் இன்றுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளது. அதேபோல தெலுங்கானாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது; ஓபிசிக்காக இட ஒதுக்கீடு உயர்த்திக் கொண்டுவரப்பட்டது. ஆனால் அங்குள்ள உயர்நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டது.
இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள டேட்டாஸ் இல்லை. அந்த டேட்டாஸ் எப்படி வரும் என்றால், இது போன்ற சாதிவாரி கணக்கு எடுக்கும் பொழுதுதான் இந்த 'ஹெட் கவுண்ட்' (Headcount) சொல்வார்கள். இந்த ஹெட் கவுண்ட் எடுத்தால்தான் அந்த இட ஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் நிற்கும். ஆகவே, அதனால்தான் இந்த ஓபிசி-க்கு நீங்கள் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது தனியாக ஒரு காலம் வைத்து — ஏனென்றால் வருகிற மார்ச் மாதத்திலிருந்து ஒன்றிய அரசு இதை ஆரம்பிக்கப் போகிறார்கள் — ஆகவே இதற்கு ஒரு காலம் வைத்து எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய கோரிக்கையும்.
ஏனென்றால், மத்திய அரசு வரும் மார்ச் மாதம் முதல் இதைத் தொடங்கப் போகிறது. எனவே, இதற்கென ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனை அகில இந்திய அளவில் கொண்டு செல்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாங்கள் எவ்வாறு சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்திலும் நானே முன்னின்று என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
— DMK (@arivalayam) November 23, 2026
இது சம்பந்தமாக திராவிட முன்னேற்றக் கழகம் பல மாதங்களுக்கு முன்னாடியே, சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற ஒரு அறிக்கை ஒன்றிய அரசிடமிருந்து வரும்பொழுது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுடையதையும் சேர்ந்து சாதி கணக்கெடுக்க வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள். இதைத்தான் எங்களுடைய தலைவர் இன்று இவர்களிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், 1931-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, ஒன்றிய அரசு மண்டல் கமிஷன் அமைக்கும் பொழுது, இந்த மண்டல் கமிஷன் 1931 சென்சஸின்படி 27% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது. அதன் பிறகு எந்த ஒரு சாதிவாரி கணக்கெடுப்பும் இதுவரை இந்தியாவில் செய்யப்படவில்லை. 2017-ல் 4,800 கோடி செலவில் சாதிவாரி கணக்கு எடுக்கப்படும் என்று எஸ்இசிசி (SECC) டேட்டா என்று கூறி ஆரம்பித்தார்கள். ஆனால் அதன் பின்பு அதில் குளறுபடிகள் இருக்கிறது, வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இன்று 11,500 கோடி செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் ஒரு படிவமும் வெளியிட்டார்கள். அந்தப் படிவத்தில் எஸ்சி, எஸ்டி என்பது மட்டும்தான் இருக்கிறது. ஓபிசி என்ற ஒரு தனியான டிராப்-டவுன் பாக்ஸ் இல்லை. இந்த டிராப்-டவுன் பாக்ஸ் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவில் உள்ள அத்தனை ஓபிசி சங்கங்களுடைய கோரிக்கை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையும் கூட, இது போன்ற ஒரு டிராப்-டவுன் பாக்ஸ் இருந்தால், ஓபிசி எத்தனை பேர் என்று சாதிவாரி கணக்கெடுப்பு செய்தால், இப்பொழுது நமக்கு இருக்கும் இந்த 27% — நான் சொல்வது ஒன்றிய அரசால் கொடுக்கப்பட்ட 27% — நிச்சயமாக தமிழ்நாடு போல 50%-க்கு மேல் இந்த இட ஒதுக்கீடு வரும். இந்த 50% இட ஒதுக்கீடு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஒன்றிய அரசு இந்த சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது ஓபிசி, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உண்டான அந்த காலத்தை அவர்கள் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
ஆகவே, இது இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஓபிசி மக்களைப் பாதிக்கிறது; அவர்களுக்கு என்று ஒரு காலம் இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த ஒரு சட்டத்தை இயற்றினாலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று, நீதிமன்றத்தில் அந்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. ஏனென்றால், ஓபிசி பிரிவினருடைய டேட்டா இல்லை என்று உடனடியாக அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பீகாரில் ஓபிசி பிரிவினருக்கு அதிக இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள்; உடனே அங்குள்ள உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. உச்ச நீதிமன்றமும் இன்றுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் உள்ளது. அதேபோல தெலுங்கானாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது; ஓபிசிக்காக இட ஒதுக்கீடு உயர்த்திக் கொண்டுவரப்பட்டது. ஆனால் அங்குள்ள உயர்நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டது.
இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள டேட்டாஸ் இல்லை. அந்த டேட்டாஸ் எப்படி வரும் என்றால், இது போன்ற சாதிவாரி கணக்கு எடுக்கும் பொழுதுதான் இந்த 'ஹெட் கவுண்ட்' (Headcount) சொல்வார்கள். இந்த ஹெட் கவுண்ட் எடுத்தால்தான் அந்த இட ஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தில் நிற்கும். ஆகவே, அதனால்தான் இந்த ஓபிசி-க்கு நீங்கள் சாதிவாரி கணக்கெடுக்கும் பொழுது தனியாக ஒரு காலம் வைத்து — ஏனென்றால் வருகிற மார்ச் மாதத்திலிருந்து ஒன்றிய அரசு இதை ஆரம்பிக்கப் போகிறார்கள் — ஆகவே இதற்கு ஒரு காலம் வைத்து எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய கோரிக்கையும்.
ஏனென்றால், மத்திய அரசு வரும் மார்ச் மாதம் முதல் இதைத் தொடங்கப் போகிறது. எனவே, இதற்கென ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து, அதனை அகில இந்திய அளவில் கொண்டு செல்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, பல விஷயங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாங்கள் எவ்வாறு சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்திலும் நானே முன்னின்று என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
.png)





English (US) ·