Last Updated:Oct 24, 2026 5:24 PM IST
நாளை (அக். 25) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (அக். 24) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து சுற்றுலாத் தளங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மழையின் தாக்கம் மற்றும் சாத்தியமான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நாளை (அக். 25) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, சுற்றுலாப் பயணிகள் வானிலை அறிவிப்புகளைக் கவனித்து, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)







English (US) ·