லக்னோ: அக். 31-
உத்​தர பிரதேசத்​தில் விவசாயி ராகேஷ் யாத​வின் வீட்டில் புளூ டிரம்​களில் புதைக்​கப்​பட்ட ரூ.5 கோடியை போலீஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.
உத்​தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜ் மாவட்​டம், பராய்​பூர் பகுதியைச் சேர்ந்​த விவசாயி ராகேஷ் யாதவ். ஏழ்​மையான நிலையில் வாழ்ந்த இவர், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள நகைக்கடை​யில் குறைந்த ஊதி​யத்​தில் பணி​யாற்றி வந்​தார்.
திடீரென சொந்த கிராமத்​தில் ரூ.10 கோடி மதிப்​பில் 14 ஏக்​கர் விவசாய நிலம், ரூ.1 கோடி மதிப்​பில் பிரம்​மாண்ட வீடு என ஆடம்பர வாழ்க்கைக்கு மாறினார். நகைக்​கடை​யில் ஊழியராக பணி​யாற்​றிய ஒரு​வருக்கு திடீரென கோடிக்​கணக்​கில் பணம் வந்தது எப்​படி என்​பது குறித்து போலீ​ஸாருக்கு சந்​தேகம் எழுந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 40-க்​கும் மேற்​பட்ட போலீஸார் ராகேஷ் யாத​வின் வீட்​டில் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது அவரது வீட்​டில் பூமிக்​கடி​யில் 3 புளூ டிரம்​கள் புதைத்து வைக்​கப்​பட்டு இருப்​பது கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது. அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்​டுகள் இருந்​தன. பணம் எண்​ணும் இயந்​திரங்​கள் மூலம் ரூபாய் நோட்​டுகள் எண்​ணப்​பட்​டன. மூன்று டிரம்​களில் ரூ.5 கோடிக்​கும் அதி​க​மான பணம் இருந்​தது. இந்த பணத்தை பறி​முதல் செய்த போலீ​ஸார், ராகேஷ் யாதவ், அவரது தம்பி ராஜேஷ் யாதவ் உட்​பட 4 பேரை கைது செய்​தனர். இந்த பணத்​துக்கு அவர் உரிய விளக்​கம் அளிக்​க​வில்லை. அவர் திடீர் பணக்​காரராக மாறியது குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது என்று டிசிபி சோனம் குமார் தெரி​வித்​தார். பணம் கைப்​பற்​றப்​பட்​டது தொடர்​பாக வரு​மான வரித் துறை அதிகாரிகள் தனியாக விசா​ரணை​யைத் தொடங்கி உள்ளனர்.