‘ஜெயிலர் 2’ வெற்றி... 40 ஆண்டுகளில் முதல்முறையாக ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி! | Jailer 2

56 minutes ago 1

Last Updated:Oct 24, 2026 1:47 PM IST

ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை முன்னிட்டு, 40 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் ரசிகர்களுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் திரையரங்கில் படம் பார்த்தார்.

News18
News18

தொடர் விடுமுறை காரணமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் மக்கள் அதிக அளவு திரைப்படத்தை கண்டு களித்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியானது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர் விடுமுறை காரணமாக ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் மக்கள் அதிக அளவு திரைப்படத்தை கண்டு களித்தனர். ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக ரூ.605 கோடி வசூல் செய்த நிலையில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது கிடையாது. அந்த சாதனையை ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகமெங்கும் 549 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் ‘ஜெயிலர் 2’ தான் எனவும் படக்குழு வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் தான் 40 ஆண்டுகளில் முதல்முறையாக திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டுகளித்தார்.


For the first time in 40 years, Superstar Rajinikanth joins fans to witness #Jailer2 on the big screen!😎🔥
#Jailer2 Industry Mega Blockbuster


#Jailer2 Rampage in theatres worldwide

@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss @IMAX

— Sun Pictures (@sunpictures) October 24, 2026

சென்னை தனியார் மாலில் திரையரங்கில் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தனது பேரன் உடன் ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படம் பார்த்தார். திரைப்படத்தை பார்க்க வந்த ரஜினிகாந்தை திரையரங்க நிர்வாகிகள் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்தக் காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

Read Entire Article