“செல்போனில் செலவிடும் நேரத்தை குறையுங்கள்…” - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அட்வைஸ்! 

1 month ago 10

Last Updated:Aug 03, 2026 7:15 AM IST

கோவையில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு அட்வைஸ்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா

“செல்போனில் செலவிடும் நேரத்தை குறைத்து, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுங்கள்” என தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த நடிகர் சூர்யாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விழாவின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் நேரலை இசை நிகழ்ச்சி ரசிகர்களை வைப் மோடிற்கு அழைத்துச் சென்றது.  மேடையேறிய நடிகர் சூர்யா, தனது படத்தின் பிரபல வசனமான "அனைவரும் சொந்தக்காரங்க..." எனப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்த சூர்யா, “செல்போனில் செலவிடும் நேரத்தை குறைத்து குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுங்கள்” என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். நண்பர்கள் தின வாழ்த்துகளோடு, திருமணத்திற்குப் பிறகும் மனைவி மீதான காதல் தொடர வேண்டும் என பேசி தனது ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை மமிதா பைஜு, 'கஜினி' திரைப்படத்திலிருந்தே சூர்யா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக சிரித்தபடி கூறினார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், 'சூரரைப் போற்று' தனது வாழ்க்கையை மாற்றிய படம் எனக் கூறினார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக 'விஸ்வநாத் & சன்ஸ்' இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இசை வெளியீட்டு விழா அமோக வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 14ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Read Entire Article