Last Updated:Aug 02, 2026 7:19 PM IST
கேளம்பாக்கம் சுற்றுவட்டார ஊராட்சிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சென்னையில் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக வசித்து வரும் வங்கதேசத்தை நாட்டை சேர்ந்த 250 பேரிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுற்றுவட்டார ஊராட்சிகளில் சட்டவிரோதமாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தாம்பரம் காவல் துறையினர் ஏறத்தாழ 250 பேரை பிடித்தனர். அதன்படி கைப்பட்டூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைவரையும் வைத்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அதில், சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்த அவர்கள் பணம் கொடுத்து ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை பெற்று குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்கின்றனர், இதற்கு முன்னர் வேறெங்கு வசித்தனர், இவர்களுடன் மொத்தம் எத்தனை பேர் இந்தியாவினுள் நுழைந்தனர், தற்போது அவர்கள் எங்கு தங்கி இருக்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து பிடிபட்டவர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும், மத்திய அரசின் அனுமதி பெற்று அனைவரையும் அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டினர்.. போலீசாருக்கு கிடைத்த பகீர் தகவல்.. என்ன நடந்தது?
.png)



English (US) ·