Last Updated:Oct 25, 2026 8:29 PM IST
செஃப் தாமு மறைவுக்கு முதலமைச்சர் விஜய், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமாகியுள்ள நிலையில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாததால் வெளிநாட்டில் இருந்து நடிகர் புகழ் கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமையல் கலை நிபுணரான செஃப் தாமு ஏராளமான முன்னணி ஓட்டல் நிறுவனங்களில் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். மேலும், முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜட்ஜாகவும் ரசிகர்களை கவர்ந்தார்.
டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட செஃப் தாமுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், செஃப் தாமுவுடன் நெருங்கி பழகிய நடிகர் புகழ் தாமுவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் வீடியோ ஒன்றில் கதறி அழுதுள்ளார்.
நியூசிலாந்தில் புகழ் இருந்து வரும் நிலையில் உடனடியாக இந்தியா திரும்ப முடியாத சூழலில் இருப்பதக அந்த வீடியோவில் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், அப்பா ஏன் சொல்லாம போய்ட்டீங்க. நான் ஃபாரின்ல இருக்கேன்பா. இப்போ டிக்கெட் போட்டாலும் அங்க வர 2 நாள் ஆகும். நான் என்ன பாவம் பண்ணினேன்..
உடம்ப பாத்துக்கோங்க என்று பலமுறை சொன்னேனே.. போனை அடிச்சாலும் நீங்க எடுக்கல.. அப்பா இறந்துட்டாங்க.. நீங்க இருக்கீங்கன்னு நெனச்சேன். இப்போ அப்பா இல்லாத அனாதையா ஆக்கிட்டீங்களே. என்று புகழ் கதறி அழுதுள்ளார்.
புகழ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
.png)






English (US) ·