Last Updated:Oct 25, 2026 8:37 PM IST
சென்னையில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, கிளம்பிய தனுஷிடம், அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 பெண் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின்பு முதன்முறையாக மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேடையில் பேசியது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் நிர்வாகிகள் சிலர் தகவல் சொல்லியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், 2000 பெண்களுக்கும் தலா ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்திருக்கிறார். மேலும், மேடையில் பேசிய அவர், பெண்கள் நன்றாகப் படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறியதாகவும், அனைவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 2000 பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட காமாட்சி விளக்கின் அடிபக்கத்தில் தாமரை பொறிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய தனுஷிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்வி...
நடிகர் தனுஷ் அளித்த பதில்...
#Dhanush #Fans #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
https://t.co/bGQ5WlgSMd https://t.co/qjPZzmB3Gf
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 25, 2026
நிகழ்ச்சி முடிந்து கிளம்பிய தனுஷிடம், இன்றைய நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அரசியல் பிரவேசம் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல், தனுஷ் தனது காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
.png)






English (US) ·