சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

47 minutes ago 1

அதிகமாகச் சாப்பிட்ட பிறகு வயிறு உப்பசமாவது பலருக்கும் நிகழும் ஒன்று. ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உட்கொள்ளும்போது இரைப்பை விரிவடைந்து, செரிமானம் தாமதமாவதால் அதிகளவில் வாயு உற்பத்தியாகிறது.

14

ஹெவி மீல்ஸ் செரிமானம் ஆவது எப்படி

ஹெவி மீல்ஸ் செரிமானம் ஆவது எப்படி

விருந்து அல்லது கல்யாண வீடுகளில் வயிறாரச் சாப்பிட்ட பிறகு வயிறு உப்பிசம் அடைந்து, அசௌகரியமாக உணர்வது நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்றுதான். அதிகப்படியான உணவு, அவசர அவசரமாகச் சாப்பிடுவது, வாயுவை உருவாக்கும் உணவுகள் அல்லது செரிமானக் கோளாறு காரணமாக இது ஏற்படுகிறது. எப்போதாவது வரக்கூடிய வயிறு உப்பசம் பெரிய ஆபத்து இல்லாவிட்டாலும், அது அன்றாட வேலைகளைப் பாதிக்கும் அளவுக்குச் சிரமத்தைத் தரும்.

குறிப்பாக அதிக கொழுப்பு, உப்பு அல்லது மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உள்ள உணவுகள் ஜீரண மண்டலத்துக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்றன. ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உள்ளே தள்ளும்போது, செரிமானம் மந்தமாகி வயிறு உப்புசம், கேஸ், அஜீரணம் உண்டாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

24

அளவுக்கு மீறி சாப்பிடும்போது நம் வயிற்றில் என்ன நடக்கிறது?

அளவுக்கு மீறி சாப்பிடும்போது நம் வயிற்றில் என்ன நடக்கிறது?

இதுகுறித்து பெங்களூரு சைட் கேர் மருத்துவமனையின் இரைப்பை குடல், அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் டாக்டர் ஆதித்யா வி. நரகுண்ட் விரிவாக விளக்குகிறார். பொதுவாக வயிறு ஒரு நேரத்தில் கையாளும் அளவை விட திடீரென அதிக உணவை ஏற்கும் போதுதான் உப்பசம் ஏற்படுகிறது. அதிகமாகச் சாப்பிடும் போது, அந்த உணவுக்கு இடம் கொடுப்பதற்காக இரைப்பை விரிவடைகிறது.

வயிறு விரிவடைவதால் உணவை அடுத்த பகுதிக்கு அனுப்பும் வேகம் குறைகிறது. இதனால் உணவு இரைப்பையிலே நீண்ட நேரம் தேங்கி விடுகிறது. செரிமானம் தாமதமாகும் போது, என்சைம்களும் குடல் பாக்டீரியாக்களும் உணவை உடைக்கும் செயல்பாட்டில் அதிகப்படியான வாயு உற்பத்தியாகிறது.

34

வயிறு உப்பசம் நீங்க வழிமுறைகள்

வயிறு உப்பசம் நீங்க வழிமுறைகள்

அத்துடன், விருந்து உணவுகளில் கொழுப்பும் உப்பும் அதிகமாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேலும் தாமதப்படுத்தும். அதுமட்டுமில்லாமல், பலர் சுவையான உணவை வேகமாகச் சாப்பிடும் பழக்கத்தில் அதிக காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகிறார்கள். வயிறு விரிவடைவது, தாமதமான செரிமானம், உள்ளே சிக்கும் கேஸ் ஆகிய மூன்றும் சேர்ந்துதான் அதிகப்படியான வயிறு உப்பசத்தையும் கனமான உணர்வையும் ஏற்படுத்துகிறது.

44

மருத்துவர் பரிந்துரைக்கும் 4 பழக்கங்கள்

மருத்துவர் பரிந்துரைக்கும் 4 பழக்கங்கள்

1. கனமான உணவுக்கு முன் லேசான உணவு:

அதிகமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக கொஞ்சமாக நார்ச்சத்துள்ள காய்கறிகள், ஒரு கப் சூப் அல்லது சாலட் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தயார்படுத்த உதவும். இது செரிமான என்சைம்களைத் தூண்டுவதோடு, பின்னர் அவசர அவசரமாக அதிகக் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கவும் செய்கிறது.

2. நிதானமாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள்:

உணவை மெதுவாகச் சாப்பிடுவதே உப்பசத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த வழி. உணவை நன்கு மெல்லும்போது அது சிறிய துகள்களாக உடைந்து, செரிமான என்சைம்கள் எளிதாக வேலை செய்ய உதவுகிறது. மேலும் மெதுவாகச் சாப்பிடும் போது தேவையற்ற காற்று வயிற்றுக்குள் போவது குறைந்து, கேஸ் உருவாவதும் நிற்கும்.

3. சாப்பிடும்போது சோடா, சாஃப்ட் டிரிங்க் தவிர்த்திடுங்கள்:

கார்பனேட்டட் பானங்கள் (சோடா, கூல்டிரிங்க்ஸ்) நேரடியாக குடலில் அதிக வாயுவைச் சேர்க்கும். இது உப்பசத்தை இன்னும் மோசமாக்கும். எனவே சாப்பிடும்போது சோடா குடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீரை மட்டும் உறிஞ்சி குடிப்பது நல்லது.

4. சாப்பிட்டதும் லேசாக நடைப்பயிற்சி செய்யுங்கள்:

கனமான உணவை முடித்த பிறகு உடனே படுக்காமல் அல்லது உட்காராமல், ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை விரைவுபடுத்தும். இந்த லேசான அசைவு குடல் இயக்கத்தைத் தூண்டி, உணவு எளிதாக நகர உதவுவதோடு வாயு தேங்குவதையும் குறைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read Entire Article