திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 23 வயது நிறைவடையாத இளையர்களுக்கு மதுபானம் விற்க மாநிலக் கலால்துறை தடை விதித்துள்ளது.
மதுக்கூடங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதை உறுதிசெய்ய ஆதார் உள்ளிட்ட அரசு அடையாளச் சான்றுகளைக் கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் கொச்சி நெடும்பாசேரி பகுதியில் 19 வயது இளையரான சுஹைல் சஜீவ் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த இளையருக்கு வயதுச் சான்று எதுவுமின்றி பல மதுக்கூடங்களில் மது விற்கப்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமானது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிதியை மீறி இளையர்களுக்கு மது வழங்கிய மதுக்கூடங்களில் உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய கலால்துறை உத்தரவிட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கூடங்களில் கலால்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும் எனக் கேரள கலால்துறை அமைச்சர் எம். லிஜு தெரிவித்துள்ளார்.
“வயது குறைவாகத் தோன்றும் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கும் முன், அவர்களின் ஆதார் அல்லது வயதை உறுதிப்படுத்தும் அரசு அடையாள ஆவணங்களைச் சரிபார்ப்பது மதுக்கூடங்களின் முதன்மைப் பொறுப்பாகும். விதியை மீறும் நிறுவனங்களின் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
.png)





English (US) ·