Last Updated:Aug 03, 2026 12:58 PM IST
தவெக எம்.எல்.ஏ. இளையராஜா குதிரை பேர வழக்கில், சேதுராஜ், நரேஷ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுவரை 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ.-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களில் சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறை இதுவரை 14 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் சேதுராஜ் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய சதியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அவர் தனது மனைவி மற்றும் ஓட்டுநர் மூலம் ஐந்து கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் அதனை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாக கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து சேதுராஜ் சதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
First Published :
Aug 03, 2026 12:58 PM IST
.png)



English (US) ·