மின்சாரக் கோளாற்றால் கிட்டத்தட்ட ஐந்து மாநிலங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. - படம்: இபிஏ
Electricity supply restored in Cuba
Electricity supply has been restored in Havana and western Cuba after a fault, having cut power overnight in five provinces. This comes amid Cuba's severe economic crisis, worsened by POTUS Donald Trump's January fuel ban aimed at ending communist rule. Recent outages in Havana lasted over 30 hours, with other areas without power for days. Cuba has faced five outages this year, blaming the US, which in turn attributes the situation to Cuba's economic mismanagement. Relations between the two countries have soured this year.
Generated by AI
ஹவானா: கியூபா தலைநகரிலும் மேற்கில் உள்ள சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் மீண்டும் திரும்பியுள்ளது.
அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் மின்சார நிறுவனம் மின்சாரச் சேவையில் ஏற்பட்ட கோளாற்றைச் சரிசெய்ததை அடுத்து விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியது.
மின்சாரக் கோளாற்றால் 15 மாநிலங்களில் கிட்டத்தட்ட ஐந்து மாநிலங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கியூபா பல ஆண்டுகளில் காணாத மோசமான பொருளியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜனவரியிலிருந்து எரிபொருள் தடையை விதித்ததிலிருந்து நிலைமை மேலும் மோசமடைந்தது.
கியூபாவில் அறுபது ஆண்டுகளாக நீடித்த கம்யூனிச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப் நெருக்கடி கொடுத்துவருகிறார்.
அண்மை வாரங்களில் தலைநகர் ஹவானாவில் மின்சாரத் தடை 30 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது. ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தீவின் பல்வேறு பகுதிகளில் பல நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கியூபா ஐந்து முறை மின்சாரத் தடையை எதிர்கொண்டுவிட்டது. அவற்றுள் மூன்று, ஜூலை மாதத்தில் 10 நாள்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்டன.
மின்சாரத் தடைக்குக் கியூபா அமெரிக்காவைக் குறைகூறியது. ஆனால், பொருளியலைச் சரிவர நிர்வகிக்காத கியூபா அரசாங்கமே தற்போதைய நிலைக்குக் காரணம் என்று அமெரிக்கா கூறியது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசந்துள்ளது.
.png)



English (US) ·