“காவிரி விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்ட கோரிக்கையை அரசு முன்னெடுக்கவில்லை” - திருமாவளவன்

1 month ago 11

Last Updated:Aug 02, 2026 7:05 PM IST

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன், “காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட விசிக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியும், அது பற்றி தமிழக அரசு எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “வந்தே மாதரம், காவிரி நீர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் என்ன பேசினார்கள், தமிழக தலைவர்கள் கருத்து என்ன என்பது குறித்து குடும்பத்தில் இருக்கும் ஆண் பெண் இருவருக்கும் தெரிய வேண்டும். பெண்கள் ஏன் இதை தெரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் களத்திற்கு வரவா போகிறார்கள் என்பது ஆதிக்க போக்கு.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்துகிறது. அது பற்றி தமிழக அரசு எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி கர்நாடக அரசு நீர் வழங்கவில்லை.

கெங்கவல்லி பகுதியில் ஏன் அம்பேத்கர் சிலையை மூடி வைத்துள்ளார்கள், ஆணவ கொலைகள், சாதிய வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர என்ன காரணம் என்பது குறித்து எல்லாம் பெண்களிடம் குடும்பத்தினருடன் உரையாட வேண்டும்.

நமக்கு தெரிந்ததை வீட்டில் பேச வேண்டும். இந்த பணிகளை செய்து கொண்டு இருந்தால் சமூகம் மேம்படும். நம் நான்கு உறுப்பினர்கள் மற்றவர்கள் பேச முடியாத அரசியலை பேசினார்கள். தமிழ்நாட்டு அரசியலில் நாம் ஒரு சக்தியாக வளர்ச்சி அடைந்த பிறகு சனாதன சக்திகளை வேர் ஊன்ற விடாமல் தடுப்பது கூர்மை அடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை இழந்து நிற்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியை சிதறவிடாமல் பாதுகாத்ததே சாதனை. திருமாவளவனை துருப்பு சீட்டாக பயன்படுத்த முயன்றார்கள். தமிழ்நாட்டில் மேலும் பாஜக வலிமை பெற பல ஆண்டுகள் ஆகும். எம்.ஜி.ஆர். வராமல் இருந்திருந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருந்திருக்கும். எம்.ஜி.ஆர். வந்த பிறகு காங்கிரஸ் பின்னுக்கு தள்ளப்பட்டது. இதுவரை அவர்களால் எழ முடியவில்லை. அதுபோல் தமிழக வெற்றிக் கழகம் வந்துள்ள நிலையில் பாஜக வளர முடியாது.

திமுக, தவெக என்ற இரு துருவ அரசியல் நிலைபெறுமா? இல்லை அதிமுக வீழ்ச்சியை பயன்படுத்தி பாஜக முன்னெடுக்குமா? திமுகவா பாஜகவா என்ற நிலை வருமா என்று இருந்தது இப்போது தமிழக வெற்றிக் கழகமும் உள்ளது” என பேசினார்.

Read Entire Article