சென்னை, நவ. 1- தமிழ்நாடு அரசின் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்’ கீழ் பயனடைவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட புதிய நடைமுறை வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.
வருமான வரம்பும் காப்பீட்டுத் தொகையும் உயர்வு
அண்மையில் நடை பெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத் திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் கூடுதல் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி முதல்
புதிய நடைமுறை
அடுத்த 5 ஆண்டு களுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கும், புதிய காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டதும், வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய காப்பீட்டு நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் தற்போதைய நிலை
தமிழ்நாட்டில் தற்போது 1.48 கோடி குடும்பங்கள் இக்காப் பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன.
942 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1,215 தனியார் மருத்துவ மனைகள் மூலம் இச்சிகிச் சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுத்துறை நிறுவனமான ‘யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ்’ மூலம் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.1,300 கோடியை காப்பீட்டுக் கட்டணமாக அரசு செலுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மேலாண்மைப் பணிகளை மெடி அசிஸ்ட், விடால், எம்டிஅய், ஹெச்அய் டிபிஏ ஆகிய நிறுவனங்கள் மாவட்ட வாரியாகப் பகிர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வருமான வரம்பு மற்றும் காப்பீட்டுத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் உயர்தர மருத்துவச் சிகிச்சைகளை பெற வழிவகை ஏற்பட் டுள்ளது.
.png)
7 hours ago
1







English (US) ·