Last Updated:Aug 03, 2026 7:00 AM IST
கபினி அணையிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 116 அடியானது.

கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அது இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைகிறது.
கேரளாவில் பெய்த தொடர் மழையால், கர்நாடா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை தனது முழு கொள்ளவை எட்ட உள்ள நிலையில் முதலில் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அது நேற்று (ஞாயிறு) காலை 14 ஆயிரத்து 958 கன அடியாக குறைக்கப்பட்டது. அது மாலையில் மீண்டும் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி தவிர்த்து கிருஷ்ணசாகர், ஹேமாவதி, ஹாரங்கி என கர்நாடாகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை வரும் எனத் தெரிகிறது.
இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 6,100 கன அடி நீர் வரும் நிலையில், நீர்மட்டம் 116 அடியாக அதிகரித்துள்ளது.
.png)



English (US) ·