கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?

1 hour ago 1

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

மேலும், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழையை எதிர்பார்க்கலாம் எனக் கணித்துள்ளது. ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், இன்று மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் இன்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்தவகையில் இன்று (அக்.23-ம் தேதி) காலை நிலவரப்படி, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கீழ்காணும் மாவட்டங்களுக்கு பின்வருமாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

1.விழுப்புரம் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

2.திருவண்ணாமலை  (பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை)

3.கள்ளக்குறிச்சி (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

4.புதுச்சேரி மற்றும் காரைக்கால் (அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை)

Read Entire Article