Last Updated:Oct 23, 2026 9:09 AM IST
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறக்கூடும் என்றும், இதனால் தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், இது பெரும்பாலும் அதே பகுதியில் நீடித்து, இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன் பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 25 அன்று மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26 காலைக்குள் மேற்கு மத்திய வங்ககடல் பகுதியில் ஒரு புயலாகவும் மாற அதிக வாய்ப்புள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
இதன்பின்னர், இது தொடர்ந்து வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி நகரும் இந்திய மாநில ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய பகுதிகளில் மிக கனமழை முதல் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது. இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. புயலாக மாறினாலும் தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதும், தமிழகத்தைப் பாதிக்காமல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி புயல் நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
.png)







English (US) ·