Last Updated:Oct 23, 2026 9:53 AM IST
“விதிமுறைகளை மீறிச் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு ஊழியர்கள் யாரும், அரசின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கூடாது” என அரசு ஊழியர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அத்துறையின் இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாதகமாக விமர்சிக்கக் கூடாது” என ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலில், அரசு ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகளின் 12-வது விதியை (Rule 12) முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிற நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் மேற்கண்ட விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் அரசு ஊழியர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
.png)







English (US) ·