சர்வதேச அளவில் அதிக வரவேற்பைப் பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மாஸ்டர் செஃப் முக்கியமான ஒன்றாகும். ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், கொலம்பியா, டென்மார்க் உள்ளிட்ட சுமார் 70 நாடுகளில் பல்வேறு வடிவங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சமையலில் ஆர்வம் கொண்டவர்கள் தங்களது தனித்துவமான திறமையை வெளிப்படுத்துவதற்கான மேடையாக இந்த நிகழ்ச்சி விளங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தமிழில் பிரபலங்களை மையமாகக் கொண்டு 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதில் நடிகை சமந்தா சிறப்பு நடுவராகப் பங்கேற்று வருகிறார். அவருடன் பிரபல சமையல் கலைஞர்களான செஃப் வெங்கடேஷ் பட், செஃப் ஸ்ரீயா அட்கா மற்றும் செஃப் சசி செல்லையா ஆகியோரும் நடுவர்களாக இடம்பெற்றுள்ளனர். நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய் தனது வழக்கமான கலகலப்பான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
சமையல் களத்தில் இறங்கிய 12 பிரபலங்கள்!
செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியில் மொத்தம் 12 பிரபலங்கள் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். ரேஷ்மி, RJ தீபக், பாலாஜி முருகதாஸ், அபி, மதிச்சியம் பாலா, தீனா, ரவி மரியா, வினோதினி, சித்தார்த்தா, சியாரா, ஜனனி அசோக் குமார் மற்றும் ஜூலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். சமையலில் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்ட இவர்கள், நடுவர்கள் வழங்கும் சவால்களை எதிர்கொண்டு தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற போட்டிகளில் பலரும் வித்தியாசமான உணவுகளைத் தயாரித்து நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்றனர். அதே நேரத்தில், சில போட்டியாளர்கள் வழங்கப்பட்ட டாஸ்க்குகளைச் சரியாக முடிக்க முடியாமல் தடுமாறியதும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.
.png)
7 hours ago
1







English (US) ·