எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

1 month ago 9

Last Updated:Aug 02, 2026 4:03 PM IST

தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை நடைபெற உள்ளது. இதில் தேர்வானவர்கள் ஆகஸ்ட் 28-க்குள் சேர வேண்டும்

நீட் தேர்வு எம்பிபிஎஸ் கவுன்சிலிங்
நீட் தேர்வு எம்பிபிஎஸ் கவுன்சிலிங்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வின் முதல் சுற்று வரும் 4ஆம் தேதி முதல் 17 வரையும், 2ஆம் சுற்று கலந்தாய்வு வரும் 24 முதல் செப்டம்பர் 2 வரையிலும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 18 வரையிலும் நடைபெறும் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை நடைபெற உள்ளது. இதில் தேர்வானவர்கள் ஆகஸ்ட் 28-க்குள் சேர வேண்டும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8 வரையிலும், மூன்றாம் சுற்று செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 26 வரையும் நடைபெற உள்ளது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான 'ஸ்ட்ரே வேகன்சி' எனப்படும் கடைசி சுற்று கலந்தாய்வு அக்டோபர் 3 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கல்வி ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கும் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

Read Entire Article