எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

1 month ago 11

Last Updated:Aug 03, 2026 10:55 AM IST

Markandeyan MLA | காவல்துறை தரப்பிலும் ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

தமிழக முதல்​வரை அவதூறாக பேசிய வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்​பட்​டுள்ள எம்.எல்.ஏ மார்க்​கண்​டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீசார் மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்

இதையடுத்து ஜாமீன் கோரி மார்க்கண்டேயன் தரப்பில் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதலில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே சமயம், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மார்க்கண்டேயன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது, மார்க்கண்டேயன் தரப்பில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் தொடர்பான மனு நிலுவையில் உள்ள நிலையில், அதே கோரிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் பரிசீலிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும், காவல்துறை தரப்பிலும் ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட றிந்தநீதிபதி சுபா தேவி, மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதுபோல் பேசப்போவதில்லை என உத்தரவாதம் அளிக்கவும், தினமும் தூத்துக்குடி போலீஸ் முன் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

First Published :

Aug 03, 2026 10:55 AM IST

Read Entire Article