“எங்கேயும் சென்று ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை…” - அமைச்சர் நிர்மல் குமாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

1 month ago 6

Last Updated:Aug 02, 2026 2:06 PM IST

“எங்கேயும் சென்று ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

'பார்ட்டி பண்ட்' விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு செந்தில் பாலாஜி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்த நிலையில், எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரம் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்டு 10 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், “இன்று ஒவ்வொரு நாளும் திமுகவில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஊரில் ஒரு ஆள் கூட கிடையாது. கரூர் செந்தில் பாலாஜி பேசிய பேச்சுக்கு இன்று ஊரிலே இல்லை. எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்திட செந்தில் பாலாஜி வரவேண்டும். அதற்கு முன்பாக ஆள் தலைமுறை வாங்கிவிட்டார். இது தேவையா? இவ்வளவு பயம் தேவையா? எதற்கு மக்கள் காசை கொள்ளை அடிக்க வேண்டும்?. எதற்கு பயந்து தெருத்தெருவாக ஓட வேண்டும்?.

தமிழ்நாட்டில் 5400 டாஸ்மாக் பார்கள் இருந்தது. இந்த 5400 பார்களையும் செந்தில் பாலாஜி கூட்டணி அமைத்து ஒரே ஆளு எல்லா பார்களையும் ஏலத்தில் எடுத்து,  ஒரு நாளைக்கு 200 கோடி 300 கோடி என்று சம்பாதிக்க நினைத்துள்ளார்.  இது தவிர, பத்து ரூபாய் கலெக்ஷன் செய்தது என்று பல்லாயிரம் கோடி டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது.” என்றார்.

'பார்ட்டி பண்ட்' விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு செந்தில் பாலாஜி எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்த நிலையில், எங்கேயும் செல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“எங்கேயும் சென்று ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை…” - அமைச்சர் நிர்மல் குமாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Read Entire Article