
லக்னோ: அக். 31-
2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, உத்தர பிரதேச பாஜக செயற்குழுக் கூட்டம் லக்னோவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
“உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவை யாராலும் அகற்ற முடியாது. மாநிலத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 30-ம் தேதி முக்கியமான நாள். 1990-ம் ஆண்டு இதே நாளில், சமாஜ்வாதி ஆட்சியில் அயோத்தியில் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சமாஜ்வாதி கட்சி, எந்த முகத்துடன் ஆட்சி அமைப்பது குறித்து பேசுகிறது? நீங்கள் ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினீர்கள். ஆனால், நாங்கள் ராமர் கோயிலைக் கட்டினோம். உங்கள் மூன்றாவது தலைமுறை வரையிலும் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
கல்யாண் சிங், தனது ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் சர்ச்சைக்குரிய கட்டிடமான பாபர் மசூதியை இடித்தார். இங்குள்ள பாஜக அரசு ‘அங்கதனின் கால்’ போன்று அசைக்க முடியாதது. அதை யாராலும் அகற்ற முடியாது.
உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மூன்றாவது முறையாக உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமையட்டும். நாங்கள் இங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
.png)
7 hours ago
1







English (US) ·