இலங்கைச் சிறையில் கலவரம்; ஒருவர் மரணம், அறுவர் காயம்

1 month ago 7

இலங்கைச் சிறையில் கலவரம்; ஒருவர் மரணம், அறுவர் காயம்

Riot in Sri Lankan prison: one dead, six injured.

A riot at Mahara Prison near Colombo, Sri Lanka, on Saturday (1 August) morning resulted in one death and six injuries. Additional police forces and Special Task Force commandos were deployed, with STF securing the prison's exterior. Officials are investigating the cause, and security has been strengthened. This follows a riot a month prior in another Sri Lankan prison that killed 31, underscoring issues of overcrowding and frequent incidents within the country's penal system.

Generated by AI

27eb25ab-4565-40bb-9975-966dbf960cbb

மஹார சிறைச்சாலையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவல்துறைப் படைகள் அனுப்பப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

Riot in Sri Lankan prison: one dead, six injured.

A riot at Mahara Prison near Colombo, Sri Lanka, on Saturday (1 August) morning resulted in one death and six injuries. Additional police forces and Special Task Force commandos were deployed, with STF securing the prison's exterior. Officials are investigating the cause, and security has been strengthened. This follows a riot a month prior in another Sri Lankan prison that killed 31, underscoring issues of overcrowding and frequent incidents within the country's penal system.

Generated by AI

கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஹார சிறைச்சாலையில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்தக் கூடுதல் காவல்துறைப் படைகள் அனுப்பப்பட்டன.

சிறைச்சாலையின் வெளிப்பகுதியைப் பாதுகாக்கச் சிறப்பு அதிரடிப்படை கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும், சிறைச்சாலையின் உட்பகுதியில் அவர்கள் களமிறக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.

இந்த வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிரப் புலனாய்வு செய்து வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறை வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கையின் மற்றொரு சிறையில் கலவரம் வெடித்தது. அதில் 31 பேர் மாண்டனர்.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அசம்பாவிதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

Read Entire Article