Last Updated:Aug 02, 2026 10:38 PM IST
ஆடி 18-ஐ முன்னிட்டு போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்தது ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரை விற்பனை: வெளியூர் வியாபாரிகள் குவிந்ததால் தீவிர விற்பனை.

வரும் ஆடி 18 பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு ஆடுகளின் வரத்து வழக்கத்தை விடப் பெருமளவில் அதிகரித்தது. இதில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.
ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி மாதக் குலதெய்வ வழிபாட்டு நேர்த்திக்கடன்களுக்காகக் கிராமப்புறங்களில் கிடாய் வெட்டி வழிபடுவது வழக்கமாகும். இதனையொட்டி, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகழ்பெற்ற போச்சம்பள்ளி சந்தைக்குப் பக்கத்து கிராமங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆட்டு பண்ணையாளர்கள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்தனர்.
சந்தையில் ஆடுகளின் தேவை அதிகரித்ததால், அவற்றின் எடை மற்றும் தரத்தைப் பொறுத்து விலையும் கணிசமாக உயர்ந்திருந்தது. சாதாரண ஆடுகள், ரூ. 15,000 வரை விற்பனையாகின. பெரிய வளர்ப்பு கிடாய்கள், ரூ. 38,000 வரை வரை அதிகபட்சமாக விலை போயின.
உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக வருகை தந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு சந்தையில் ஆடுகள் வரத்தும் விற்பனையும் களைகட்டியதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
First Published :
Aug 02, 2026 10:38 PM IST
.png)



English (US) ·