Last Updated:Aug 02, 2026 8:19 PM IST
திண்டுக்கல் மலர் சந்தைக்கு 15 டன் பூக்கள் வருகை தந்த இடத்தில் 5 டன் பூக்களை வருகை வரத்து குறைவு மற்றும் ஆடி 18 முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு விலை உயர்வு

திண்டுக்கல் நகர் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக பூச்சந்தையானது செயல்பட்டு வருகிறது. இந்த பூச்சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றி உள்ள வெள்ளோடு நரசிங்கபுரம் சின்னாளப்பட்டி ஆத்தூர் நிலக்கோட்டை கோபால்பட்டி சாணார்பட்டி வடமதுரை அய்யலூர் ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில் இருந்து தங்கள் விலை நிலங்களில் விளையக்கூடிய பூக்களை இந்த மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவர்.
இங்கு வரக்கூடிய பூக்களை திருச்சி ,தஞ்சை ,சென்னை, திருப்பூர், தாராபுரம், கோவை ,நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்வர். சென்ற மாதம் வரை இந்த மலர் சந்தைக்கு 15 டன் பூக்கள் வருகை தந்த இடத்தில் தற்பொழுது கடும் வறட்சி காரணமாக பூக்களின் வரத்துகள் குறைந்து 5 டன் பூக்களே வருகை தந்ததாலும், நாளை ஆடி 18 திருநாள் முன்னிட்டு பூக்களின் தேவைகள் அதிகரித்து காணப்படுவதால் பூக்களின் விலை கிடு கிடு என விலை உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
சென்ற மாதம் 300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ1000 ரூபாய்க்கும், 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ முல்லை பூ 600 ரூபாய்க்கும்,100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ ரோஸ் 250 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கு விற்பனையான கோழிகொண்டை பூ 120 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சம்பங்கி பூ 400 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ செண்டுமல்லி 120 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் 400 ரூபாய்க்கும், ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான ஜாதிப்பூ 350 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.
.png)



English (US) ·