Last Updated:Aug 02, 2026 6:01 PM IST
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு நிச்சயம் மாலை நேரங்களில் மழை பொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கோடை காலம் முடிந்தும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது; “ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரையிலான வாரத்தில், கிட்டத்தட்ட தினமும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளைகளில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நகரம் முழுவதும் பரவலாக மழை பொழிவு இருக்காது என்றாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரங்களின் சில பகுதிகளில் அடுத்த 6 முதல் 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று (2ஆம் தேதி) சில பகுதிகளில் நல்ல மழை பெய்யலாம், அதே சமயம் அருகிலுள்ள பகுதிகளில் மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவலாம். உங்கள் பகுதியில் இன்று மழை பெய்யவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மழை மேகங்கள் சென்னை முழுவதும் நகர்ந்து கொண்டிருப்பதால், அடுத்த நாளே உங்கள் பகுதிக்கும் மழை கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது.
மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்வதாக இருந்தால், குடை, ரெயின் கோர்டு உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லுங்கள். சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய திடீர் மற்றும் தீவிர மழை பெய்யக்கூடும் என்பதால், எதிர்பாராத மழையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கத் தயாராக இருங்கள்.
ஆகஸ்ட் 2 முதல் 8-ஆம் தேதி வரையிலான வாரத்தில், கிட்டத்தட்ட தினமும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளைகளில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒரு வாரத்திற்கு மழையை கொண்டாடுங்கள்” -பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நிச்சயம்.
பிரதீப் ஜான் சொன்ன குளிர்ச்சியான செய்தி.
8ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.
.png)



English (US) ·