Last Updated:Oct 24, 2026 7:41 PM IST
அருள்நிதி மற்றும் அமீர் நடிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்ட சாமி படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள்நிதி - அமீர் நடிக்கும் ‘வேட்ட சாமி’ படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘அருள்வான்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அருள் நிதி நடிக்கும் படத்தை செல்வகுமார் இயக்கியுள்ளார். ‘வேட்ட சாமி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, மைனா நந்தினி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நெல்லை மாவட்ட பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை.
#VettaSaami is all set to arrive in theatres this December! 💥
“Escape the law. Face the god.” 🔥
#VettaSaamifromDecember
@arulnithitamil #Ameer @directormskumar
@AntonyLRuben #GMPicturesEntertainment @GhibranVaibodha @RDRajasekar @dineshashok_13 @Jegan_kaviraj #MadhaviVillisai @SamuelM64562032 @teamaimpr
— 7MPS Productions (@7MPS_Production) October 23, 2026
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன் எக்ஸ் தள பக்கத்தில், “வேட்ட சாமி இந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும். சட்டத்திலிருந்து தப்பித்து இறைவனை எதிர்கொள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)







English (US) ·