ஒரே சார்ஜில் 250 கி.மீ., கழற்றி மாட்டும் பேட்டரி.. ரூ.1.20 லட்சத்தில் களமிறங்கிய 'வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா' இ-ஸ்கூட்டர்!

1 hour ago 1

வழக்கமான ஸ்கூட்டர்களில் இருந்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டுள்ள ஸ்ட்ரேடாவில் பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் டூயல் புரொஜெக்டர் எல்.இ.டி ஹெட்லைட் மற்றும் முழுமையான எல்.இ.டி விளக்குகள், காற்றைத் தடுக்கும் முன்புற விண்ட் ஷீல்டு கண்ணாடி, வசதியான இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இருக்கை (Split Seat), பின்புறத்தில் கூடுதல் லக்கேஜ் ஏற்றிச் செல்ல உதவும் லக்கேஜ் ராக், 5 இன்ச் டிஎஃப்டி (TFT) திரை, சாவியில்லா ஸ்டார்ட் (Keyless Start) வசதி, செல்போன்களை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-ஏ (Type-A) மற்றும் டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட்கள். இந்த ஸ்கூட்டர் கார்போனியோ பிளாக், லூனா ஒயிட், டைட்டானியோ கிரே மற்றும் உர்பானோ சில்வர் ஆகிய 4 கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.

சஸ்பென்ஷன், பிரேக்கிங் & பரிமாணங்கள்

முன்புறம் 16 இன்ச் சக்கரமும், பின்புறம் 14 அங்குல சக்கரமும் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. முன்புறத்தில் 240 மி.மீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மி.மீ டிஸ்க் பிரேக்கும் சிபிஎஸ் (CBS - Combi Braking System) பாதுகாப்புடன் வழங்கப்பட்டுள்ளன; இதில் ஏபிஎஸ் (ABS) வசதி இடம்பெறவில்லை. சீட் உயரம் 780 மி.மீ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மி.மீ மற்றும் ஸ்கூட்டரின் மொத்த எடை 98 கிலோ ஆகும்.

இந்திய சந்தையில் விற்பனையாகும் டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), ஏத்தர் (Ather) மற்றும் விடா (Vida) ஆகிய முன்னணி நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு வி.எல்.எஃப் ஸ்ட்ரேடா நேரடிப் போட்டியாக அமையும். வாடிக்கையாளர்கள் விலை மட்டுமின்றி பேட்டரி திறன், நடைமுறையில் கிடைக்கும் ரேஞ்ச், சார்ஜிங் வசதி மற்றும் சர்வீஸ் மையங்களின் இருப்பை ஒப்பிட்டுத் தேர்வு செய்வது அவசியம்.

Read Entire Article