ஹிசார், நவ.23 அரியானா மாநிலத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக பீரங்கி ஏறியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அரியானா மாநிலம் போஜராஜ் கிராமப் பகுதியில் இந்திய ராணுவத்தின் வழக்கமான போர்ப் பயிற்சி நடைபெற்று வந்தது. இந்தப் பயிற்சியில் கனரக பீரங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்றுமுன்தினம் (நவ. 21) பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் அதிகப்படியான புழுதி கிளம்பியதால் பீரங்கி ஓட்டுநரின் பார்வை முற்றிலுமாக மறைக்கப்பட்டது.
இதன் காரணமாக, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நாயக் மனிஷ் குமார் மற்றும் நாயக் அனுஷ் குமார், இரு வீரர்கள் மீது பீரங்கி எதிர்பாராத விதமாக ஏறிச் சென்றது. இந்தக் கோர விபத்தில் இரு வீரர்களும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக சக வீரர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஹிசார் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்ச் மாவட்டத்தில்
நில அதிர்வு: மக்கள் பீதி!
அகமதாபாத், நவ.23 குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நேற்று (22.11.2026) ஏற்பட்ட லேசான நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
கட்ச் மாவட்டத்தின் துதாய் பகுதியில், பூமிக்கு அடியில் 18 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதனை காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மய்யம் (ISR) உறுதிப்படுத்தியுள்ளது.
நில அதிர்வின் தாக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் லேசாகக் குலுங் கியதால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். எனினும், இந்த நில அதிர்வால் உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
.png)
10 minutes ago
1




English (US) ·