Last Updated:Aug 03, 2026 6:49 AM IST
அரசு டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பதிலளித்துள்ளார்.

அரசு டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பதிலளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதி சொக்கனூர் ஊராட்சியில் தமிழ்நாடு வெற்றிக் கழக கிளை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “கடந்த காலங்களில் கோவைக்கான வளர்ச்சி இருக்காது. சில கட்சிகளுக்கான வளர்ச்சியும் கட்சி நிர்வாகிகளுக்கான வளர்ச்சி தான் இருந்தது.
இந்த பட்ஜெட்டில் கோவை மக்கள் எதிர்பார்க்காத பல திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை ஆதாரம் இல்லாமல் யார் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாட்டார்கள். இதற்கெல்லாம் கருத்து சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ள கேள்விகளுக்கும் மக்களின் வளர்ச்சி இருந்தால் அதைப் பற்றி பேசலாம். மதுவிலக்கு துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்ய பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியார் மயமாக்குவது போன்ற விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால், அது தொடர்பாக உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
கனிமவளங்களை முறைகேடாக கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தினுடைய செல்வங்களை பாதுகாக்க வேண்டும் முறைகேடாக யாரும் பயன்படுத்தக் கூடாது இப்பிரச்சினைகள் படிப்படியாக தீர்வு காணப்படும்” என தெரிவித்தார்.
.png)



English (US) ·