Weather Today | தமிழ்நாட்டில் இன்று இந்த 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

1 month ago 8

Last Updated:Aug 03, 2026 7:08 AM IST

சென்னையை பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மழை
மழை

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீடட்ர் உயரத்தில் உள் கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் வரை தமிழ்நாடு வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

Weather Today | தமிழ்நாட்டில் இன்று இந்த 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

Read Entire Article