TRB | 18,000 காலிப்பணியிடங்கள்: முதற்கட்டமாக 2,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்? டி.ஆர்.பி திட்டம் என்ன?

1 month ago 7

Last Updated:Aug 02, 2026 1:33 PM IST

Teachers Recruitment Board | ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் சுமார் 2,000 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்​பான அறி​விப்பு இம்மாதம் வெளி​யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி, தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) மூலமாகவே நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வட்டார கல்வி அலுவலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் இந்த தேர்வு வாரியம் வாயிலாகவே நிரப்பப்படுகின்றன.

கடைசியாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் 2,582 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 18,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் டிஆர்பி மூலம் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் போட்டித்தேர்வினை நவம்பர் மாதம் நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாரெல்லாம் இந்த தேர்வை எழுதலாம்? பட்டதாரி ஆசிரியர் தேர்வை டெட் தாள்-2-இல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதலாம். பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் தேர்வைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தேர்வில் 30 வினாக்கள் இடம்பெறும். கட்டாயத் தமிழ் மொழித் தாளில் தேர்வர்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.

தமிழ் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி மெரிட் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றாலும், இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வரின் முதன்மைப் பாடத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேட்டூர் அணை 100 அடி வந்தாலே பெரிய விஷயம்...  டெல்டா விவசாயிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து..?

El Nino: மேட்டூர் அணை 100 அடி வந்தாலே பெரிய விஷயம்... டெல்டா விவசாயிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து..?

  • எல்நினோ காரணமாக, இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டுவது கடினம்

  • 100 அடியை எட்டினாலே பெரிய விஷயம்

  • வடகிழக்கு பருவமழையே ஒரே தீர்வு

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article